விண்வெளியில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த முக்கிய தகவல்களை நாசா வெளியிடப்போவதாக அறிவிப்பு - செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு

Feb 22 2017 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

வின்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்று ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்புவிடுத்துள்ளது.

சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களைப் பற்றிய புதிய கண்டுபிடிப்பு விவரங்களை நாசா, இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு வெளியிட உள்ளது. இதில், நாசா அறிவிக்கப்போகும் புதிய கண்டுபிடிப்புகள் 'நேச்சர்' இதழிலும் வெளியாகவுள்ளன. இதனால், விண்வெளி ஆர்வலர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள நாசா தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த செய்தியாளர்கள் சந்தப்பில், நாசாவின் முக்கிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்க உள்ளனர். முன் அனுமதிபெற்ற ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை NASA Tv - யில் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர். www.nasa.gov/nasatv என்ற இணைய முகவரியில், கருத்தரங்கம் தொடர்பான வீடியோ பதிவுகளைத் தரவிறக்கம்செய்து கொள்ள முடியும். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் ட்விட்டரில் askNASA என்ற ஹேஷ்டேக் மூலம் கேள்வி கேட்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00