பயங்கரவாதி ஹஃபிஸ் சயீத் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு : இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே சயீத் கைது செய்யப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளதால் பாகிஸ்தானின் இரட்டை வேடம் அம்பலம்

Feb 21 2017 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

பயங்கரவாதி Hafiz Saeed தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவரை சிறை வைத்துள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறி வரும் நிலையில், இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே Saeed கைது செய்யப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை நடத்தும் அறக்கட்டளை நிறுவனம் என்ற பெயரில் Jamaat-ud-Dawa என்னும் தீவிரவாத அமைப்பை நிறுவி, இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நாசவேலைகளில் Saeed ஈடுபட்டார். கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட Saeed-ஐ கைது செய்யவேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கு செவிசாய்க்காமல் இருந்த பாகிஸ்தான் அரசு, சர்வதேச அழுத்தம் காரணமாக Saeed-ஐ கைது செய்துள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால்தான் Saeed கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதனை Saeed-ன் சகோதரர் Hafiz Masood மறுத்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே Saeed கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், Saeed மீது சர்வதேச ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00