சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 34 பேர் பலியான பரிதாபம் - உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

Feb 20 2017 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சோமாலியாவில், மார்க்கெட் பகுதி ஒன்றில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இத்தாலியின் காலனி ஆதிக்கத்திலிருந்த சோமாலியா, 1960-ம் ஆண்டு விடுதலை பெற்றது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் தலைவிரித்தாடும் வறுமை, உலக நாடுகளிடையே பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சோமாலியா தலைநகர் Mogadishu-வில் நேற்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. அப்பகுதியில் உள்ள மார்க்கெட் ஒன்றில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன், சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். 52 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால், உயிர் பலி அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், தலைநகரில் இதுபோன்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் Al Shabaab அமைப்பு, இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00