அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த "Obama Care" மருத்துவ சட்டத்தை ரத்து செய்து கையெழுத்திட்டார் Donald Trump : அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் முதல் அதிரடி நடவடிக்கை

Jan 21 2017 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள Donald Trump, முதன்முதலாக "Obama Care" என அழைக்கப்படும் நோயாளி காப்பு மற்றும் கவனிப்பு சட்டத்துக்கு எதிரான கோப்பில் கையெழுத்திட்டார்.

Obama Care சட்டத்தின் கீழ், பணியமர்த்துவோர் அல்லது அரசின் காப்புறுதி திட்டங்களில் இடம்பெறாதவர்கள் குறைந்தபட்சம் உடல்நலக் காப்புறுதி திட்டம் ஏதாவது ஒன்றில் பங்கேற்க வேண்டும் அல்லது அபராதம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திற்கு பெரும்பான்மையான மாகாணங்களும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றால் இந்த சட்டத்தை ரத்து செய்வதாக Donald Trump தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்தார். அதன்படி, அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுள்ள Donald Trump, ஒபாமாகேர் சட்டத்தை ரத்து செய்வதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். மேலும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஆகியோ தொடர்பான கோப்புகளிலும் Trump கையெழுத்திட்டார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் Donald Trump, வெள்ளையர், கருப்பினத்தவர் என தான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்றும், அனைவரது உடலிலும் ஓடுவது சிவப்பு ரத்தம்தான் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வெளியே நடைபெற்ற ராணுவ அணிவகுப்பினை Trump தனது குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றபின்னர், அந்த நாட்டின் வழக்கப்படி, "My Way" என்ற பாடலின் இசைக்கேற்ப Trump தனது மனைவி Melania-வுடன் நடனமாடினார். இந்த நடனத்தில், துணை அதிபர் Mike Pence மற்றும் அவரது மனைவி Karen Pence ஆகியோரும் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00