உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி : உடல்நலம் தேறி வீடு திரும்ப அதிபர் ஒபாமாவும், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்பும் வாழ்த்து

Jan 19 2017 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப, அதிபர் ஒபாமாவும், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்பும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் புஷ் டெக்சாஸ் மாகாணத்தில் தற்போது வசித்து வருகிறார். 92 வயதான இவர் பர்கின்சன் நோயால் அவதிப்பட்டு, சக்கர நாற்காலியை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரது உடல் திடீரென மோசமானதை அடுத்து Houston மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அதே மருத்துவமனையில், சோர்வு மற்றும் தொடர் இருமல் காரணமாக அவரது மனைவி Barbara-வும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜார்ஜ் புஷ் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக நாளை பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்பும், ஜார்ஜ் புஷ் உடல் நலம் பெற டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00