இத்தாலியில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியுள்ள 20க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம்

Jan 19 2017 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இத்தாலியில் தலைநகர் ரோம் மற்றும் பிளாரன்ஸ் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து 3 முறை 5.7 ரிக்டர் அளவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. ரோம் நகரில் மெட்ரோ ரெயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் ரெயில் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பள்ளிக் கட்டடங்கள் குலுங்கியதால், மாணவர்கள் வகுப்பறையிலிருந்து பீதியுடன் அலறியடித்து ஓடினர். இதனால் அனைத்து பள்ளிகளுக்கும் தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என கருதி மக்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே, நிலநடுக்கத்தால், Abruzzo பகுதயில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள உணவு விடுதி ஒன்று பனிக் குவியலால் மூடப்பட்டது. இதில் 20 சுற்றுலாப்பயணிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் உள்ளிட்டோர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க இத்தாலி மீட்புப்படையினர் அங்கு விரைந்துள்ளனர். இத்தாலியில் இதே பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00