மாலி நாட்டில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் - ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்

Jan 19 2017 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாலி நாட்டில் வெடிபொருள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 60 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான மாலியில் தீவிரவாத தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனிடையே, வடக்கில் உள்ள Gao-வின் பாலைவனப்பகுதியில் அரசுப்படை மற்றும் ஆயுதம் ஏந்திய குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வீரர்கள் அனைவரும் குழுமிய நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. வெடிபொருள் நிரப்பிய காரை, ராணுவ முகாம் மீது மோத வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 60 வீரர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் அந்நாட்டு மீட்பு குழுவுடன் இணைந்து சீன அமைதி காக்கும் படை உறுப்பினர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00