ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும்போது, ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் : அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு

Jan 18 2017 7:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும்போது, ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் என, அந்நாட்டு பிரதமர் Theresa May அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகினாலும், ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்கலாம் என்ற யோசனையை ஏற்க முடியாது என, Theresa May தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்காக, அதன் 28 உறுப்பு நாடுகளுடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தை அம்சங்கள் குறித்து, Theresa May கூறுகையில், தனி நாடுகள் இடையே, பரஸ்பர ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் என்றார். யூனியலிருந்து விலகுவதற்கான இறுதி ஒப்பந்தம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் அவர் கூறினார்.

எனினும், நாடாளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்குமா, அல்லது அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாமலேயே அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுமா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்தால், பிற ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கட்டுப்பாடற்ற அனுமதி வழங்க வேண்டியிருப்பதோடு, ஐரோப்பிய நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கும் பிரிட்டன் கட்டுப்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00