இத்தாலியில் புதிய சட்டத்திருத்தத்தின் மீது நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் தோல்வி : பிரதமர் Matteo Renzi பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்

Dec 5 2016 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் புதிய சட்டத்திருத்தத்தின் மீது நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் Matteo Renzi தனது பதவியை ராஜினாமாசெய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டில், பிரதமரை தங்கள் வாக்குறுதி மூலம் நீக்கம் செய்யும் அதிகாரம், நாடாளுமன்ற மேல் சபை மற்றம் கீழவை உறுப்பினர்களுக்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, 5 ஆண்டுகால ஆட்சி காலத்தை நிறைவு செய்யாமல், அவ்வப்போது ஆட்சிகள் கவிழ்க்கப் பட்டதால், 2-ம் உலகப் போருக்கு பின்னர் இத்தாலியில் 63 முறை ஆட்சி கவிழ்ப்புகளும், புதிய அரசு தேர்வும் நடைபெற்றது. இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்து, பிரதமரை தங்களது வாக்குரிமை மூலம் நீக்கம் செய்ய நாடாளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை, அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து நீக்குவது என பிரதமர் Matteo Renzi தீர்மானித்தார். இதற்காக, இத்தாலி அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய் முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு மக்களின் ஆதரவை பெறும் வகையில், நாடு முழுவதும் நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பதிவான வாக்குகளில் சுமார் 59 புள்ளி 5 சதவீத வாக்குகள், இந்த சட்டத்திற்கு எதிராக கூடாது என பதிவாகியிருந்தன. வெறும் 11 புள்ளி ஐந்து சதவீத வாக்குகளே பிரதமரின் முடிவுக்கு சாதகமாக அமைந்தன. இதையடுத்து இந்த பொது வாக்கெடுப்பில் பிரதமர்Matteo Renzi-ன் திட்டம் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக Matteo Renziஅறிவித்துள்ளார்.

இத்தாலி நாடாளுமன்றத்திற்கு வரும் 2018-ம் ஆண்டு பொதுத் தேர்தவு நடைபெறவுள்ளதையடுத்து, இந்த பொது வாக்கெடுப்பு முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00