பாகிஸ்தான் அளிக்க முன்வந்த 50 கோடி டாலர் நிதியுதவி நிராகரிப்பு - அஃப்கனிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி : பணத்தை வைத்து உங்கள் நாட்டு தீவிரவாதிகளை ஒழியுங்கள் என ஆவேசம்

Dec 5 2016 8:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் அரசு அளிக்க முன்வந்த 50 கோடி டாலர் நிதியுதவியை நிராகரித்துள்ள அஃப்கனிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, அந்தப் பணத்தை வைத்து உங்கள் நாட்டு தீவிரவாதிகளை ஒழியுங்கள் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அஃப்கனிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 'ஆசியாவின் இதயம்' என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

அஃப்கனிஸ்தான் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதன் அண்டை நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் அஃப்கனிஸ்தானுடனான பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இதையடுத்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரஸ் நகரில் இந்த ஆண்டுக்கான 'ஆசியாவின் இதயம்' மாநாடு கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது. ரஷியா, சீனா, துருக்கி உள்பட 'சார்க்' அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதரநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்று, மாநாட்டின் முதல்நாளான கடந்த சனிக்கிழமை அன்று ஆலோசனை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து, நேற்றைய மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, அஃப்கனிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பாகிஸ்தான் அரசின் சார்பில் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

இந்த மாநாட்டின்போது, அஃப்கனிஸ்தான் மீள்கட்டமைப்புக்காக பாகிஸ்தான் அளிக்க முன்வந்த 50 கோடி டாலர் நிதியுதவியை வேண்டாம் என்றுகூறி, நிராகரித்துவிட்ட அஃப்கனிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் எவ்வளவு பணத்தை அளித்தாலும் எங்களுக்கு அது உதவிகரமாக இருக்காது.

அந்தப் பணத்தை வைத்து முதலில் உங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஒழியுங்கள் என்று குறிப்பிட்டார். அதேவேளையில், எவ்வித நிபந்தனையுமின்றி இந்தியா வெளிப்படையாக அளிக்க முன்வந்த 100 கோடி டாலர்களை மனமார ஏற்றுக்கொள்வதாகவும் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00