ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்திக்கு, இறுதியஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு : Santiago நகரின் Santa Ifigenia கல்லறையில், ஃபிடல் காஸ்ட்ரோ அஸ்தியை இன்று நல்லடக்கம் செய்ய ஏற்பாடு

Dec 4 2016 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி, கியூபா நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதியஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், இந்த நூற்றாண்டின் சிறந்த புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90-வது வயதில், தலைநகர் ஹவானாவில் கடந்த மாதம் 25-ம் தேதி காலமானார். இதனையடுத்து அந்நாட்டில் 9 நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. ஃபிடல் காஸ்ட்ரோ விருப்பப்படி உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி, ஹவானா நகரில் உள்ள புரட்சி சதுக்கத்தில் இருந்து, அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வழியாக 4 நாட்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,Santiago நகரில் உள்ள பொதுச் சதுக்கத்தை நேற்று மாலை சென்றடைந்தது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று, உரக்க குரல் எழுப்பி, மறைந்த தங்களது மாபெரும் தலைவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Santiago நகரின் பொதுச் சதுக்கத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ அஸ்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ப்ரசில், நிகாரகுவா, வெனிசூலா, பொலிவியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய கியூபாவின் தற்போதைய அதிபரும், ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான Raul Castro, கியூபாவில் எந்த ஒரு இடத்திற்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயர் வைக்கப் போவதில்லை என்றார். இது ஃபிடல் காஸ்ட்ரோவின் விருப்பம் என்று தெரிவித்த அவர், இதற்காக நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் குறிப்பிட்டார். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு, Santiago நகரின் Santa Ifigenia கல்லறையில், ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி, இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00