பொருளாதார தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : வடகொரியா திட்டவட்டம்

Dec 2 2016 9:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொருளாதார தடை விதித்து, ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வடகொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டிற்கு, தென்கொரியாவும், ஜப்பானும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் அணு ஆயுத சோதனையை நடத்தியதற்காக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை பொருளாதாரத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது. அந்நாட்டிடமிருந்து நிலக்கரி, செப்பு, நிக்கல், வெள்ளி, துத்தநாகம் போன்றவற்றை பிற நாடுகள் வாங்காமலிருக்க இந்த தடை வகை செய்கிறது. இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தங்களுடைய இறையாண்மை மற்றும் வாழும் உரிமையை, இத்தீர்மானம் மறுக்கிறது என்றும் வடகொரியா குற்றம்சாட்டி உள்ளது. இதனிடையே, தென்கொரியாவும், ஜப்பானும் ஒருதலைபட்சமாக வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும், வடகொரியத் தலைவரின் நெருங்கிய உதவியாளர்களான Choe Ryong Hae, Hwang Pyong So உட்பட மூத்த அதிகாரிகளின் பெயர்களை கருப்புப் பட்டியலில் இந்நாடுகள் சேர்த்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00