கியூபாவின் சாண்டா கிளாரா நகரில் உள்ள சே குவேரா நினைவகத்தில், பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது

Dec 2 2016 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கியூபா நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர், பிடல் காஸ்ட்ரோவின் விருப்பப்படி, அவரது உடல் கடந்த ஞாயிறன்று தகனம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தலைநகர் ஹவானாவில் இருந்து, அவரது அஸ்தியின் ஒரு பகுதி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கியூபா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கியூபாவில், பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி நடந்தபோது, கொரில்லா படைகள் பெரும் வெற்றி பெற்ற, சாண்டா கிளாரா நகரில் உள்ள சே குவேராவின் நினைவகத்தில் காஸ்ட்ரோவின் அஸ்தி பெட்டி வைக்கப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, காஸ்ட்ரோவுடன் சேர்ந்து, சே குவேராவுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமையில், மக்களவை துணைத் தலைவரும், அ.இ.அ.தி.மு.க உறுப்பினருமான டாக்டர் மு.தம்பிதுரை உள்ளிட்ட ஏழு எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் கியூபா சென்றனர். அங்கு பிடல் காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வரும் 4-ம் தேதி, சாண்டியாகோ நகரில், காஸ்ட்ரோவின் கல்லறைக்கு அஸ்தி கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00