நியூயார்க்கில் நடைபெற்ற வருடாந்திர கிறிஸ்துமஸ் ஒளித்திருவிழா - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Dec 1 2016 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூயார்க் நகரம் ராக்பெல்லர் மையத்தில் நடைபெற்ற வருடாந்திர கிறிஸ்துமஸ் ஒளித்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஏசுபிரான் பிறந்த தினம் டிசம்பர் மாதம் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ராக்ஃபெல்லர் மையத்தில் ஒவ்வொரு வருடமும், பிரம்மாண்ட கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டு அதற்கு ஒளியூட்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் 94 அடி உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இம்மரம் சுமார் 50 ஆயிரம் மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு மிளிரவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ராக்பெல்லர் மையத்தில் கூடினர். நிகழ்ச்சியையொட்டி, Dolly Parton மற்றும் Tony Bennett ஆகிய நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00