இஸ்ரேல் - ஜோர்டான் இடையே மிகவும் அபாயகரமான கடல் பகுதியில் நீந்திச் சென்று சாதனை

Nov 16 2016 8:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடல் பரப்பு குறைந்து வருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 நீச்சல் வீரர்கள், இஸ்ரேலுக்கும், ஜோர்டானுக்கும் இடையே உள்ள மிகவும் அபாயகரமான கடல் பகுதியில் நீந்திச் சென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இஸ்ரேலில், விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து, கடல் பரப்பு குறைந்து வருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 நீச்சல் வீரர்கள், பரப்பளவு வேகமாகக் குறைந்து வரும் ஜோர்டானில் இருந்து இஸ்ரேல் வரை மிகவும் அபாயகரமான கடல் பகுதியில் நீந்திச் சென்றனர்.

சாதாரணமான கடலில் காணப்படும் உப்பின் அளவைவிட, பரப்பளவு குறைந்து வரும் இந்தக் கடலில், உப்பு தன்மை 10 மடங்கு அதிகமாக உள்ளது. இந்தக் கடலில் நீந்திச் செல்லும்போது, உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், கண்களும், நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இவர்களுடன் படகு மூலம் ஒரு மருத்துவக் குழுவினரும் சென்றனர். மருத்துவக் குழு உதவியுடன் 28 நீச்சல் வீரர்களும் சுமார் 7 மணிநேரம் நீந்திச் சென்று சாதனை படைத்தனர்.

கடல்நீர் வேகமாக ஆவியாதல் மற்றும் குடிநீருக்காக அதிக அளவில் சுத்திகரிக்கப் பயன்படுத்துவதாலும் இங்கு கடல்பரப்பு வேகமாக குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து இந்நிலை நீடித்தால், 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தக் கடல் பகுதியே காணாமல்போய்விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00