ரஷ்யாவில் 4 வயது பெண் குழந்தை உலகின் உள்ள 7 மொழிகளில் பேசி அசத்தல்

Oct 25 2016 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் உள்ள 4 வயதான பெல்லா என்ற குழந்தை, உலகின் உள்ள 7 மொழிகளில் பேசி வருவது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வசிக்கும் பெல்லா தேவ்யாட்கினா என்னும் 4 வயது பெண் குழந்தை, 7 மொழிகளில் சரளமாக பேசும் வல்லமை பெற்றிருக்கிறாள். சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெல்லா, ரஷ்ய மொழி, ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரஞ்சு, சீனா, அரபு என ஒரே நேரத்தில் ஏழு மொழிகளில் பேசி அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்தாள். பெல்லாவின் அபரித திறமை குறித்து உலகம் முழுவதிலும் இருந்து பலரும் தங்களது பாராட்டுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ரஷ்யாவில் 7 வயதான பின்னரே குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவது வழக்கம். அந்தவகையில் பள்ளிப்படிப்பைத் தொடங்கவே இன்னும் 3 வருடங்கள் இருக்கும் நிலையில், பெல்லாவின் மொழி திறன் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதுகுறித்து பெல்லாவின் தாய் யூலியா தெரிவிக்கையில், 2 வயதிலேயே ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளை பெல்லா ஆர்வமுடன் கற்றுக்கொண்டார் என குறிப்பிட்டார். இதனையடுத்து மொழிகளைக் கற்றுக் கொள்வதில் பெல்லா காட்டிய ஈடுபாடு காரணமாகவே மேலும் சில மொழிகளை அவர் எளிதில் கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00