சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அதிபர் Xi Jinping-க்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படலாம் என தகவல்

Oct 25 2016 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18-வது மத்திய குழுக்கூட்டம், தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. சீன அதிபர் Xi Jinping, பிரதமர் Li Keqiang உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 4 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. தற்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைப்படி அதிபர் Xi Jinping, வரும் 2022-ம் ஆண்டு வரை பதவி வகிக்கலாம். அவரது பதவி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக விவாதம் நடத்தப்படலாம் என தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில், கட்சி, ராணுவம், அதிபர் பதவி என நாட்டின் மிகவும் வலிமை வாய்ந்த தலைவராக உள்ள Xi Jinping-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டத்தில், அரசின் செயல்பாடுகள் குறித்து அதிபர் தலைமையிலான அரசியல் விவகாரக்குழு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00