உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் Jorge Batlle உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் : அவருக்கு வயது 88

Oct 25 2016 10:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் Jorge Batlle உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 88.

உருகுவேயில் கடந்த 1927ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி பிறந்த Jorge Batlle அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை Luis அதிபராக 2 முறை பதவி வகித்தவர். வழக்கறிஞராக தனது பணியை தொடங்கிய Jorge Batlle, பத்திரிகையாளராகவும், காங்கிரஸ் சபையின் செனட் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

பின்னர் Colorado கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரும்பாடுபட்ட இவர், அந்நாட்டு அதிபராக கடந்த 2000மாவது ஆண்டுமுதல் 2005ம் ஆண்டு வரை பதவி வகித்தார். உருகுவே அதிபர்களிலேயே மிகவும் பிரபலமாகத் திகழ்ந்த Jorge, ஐ.நா.வுடன் நட்புறவை வளர்த்துக்கொண்டதோடு, நிதிநெருக்கடி காலத்தில் அமெரிக்காவிடம் இருந்து பெருமளவு நிதியை பெற்றுத்தர காரணமாக அமைந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், Montevideo-வில் உள்ள Sanatorio Americano மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00