சீனாவில் நடைபெற்று வரும் 2016-ம் ஆண்டுக்கான உலக ரோபோட்டுகள் மாநாடு : மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு உரையாடும் ரோபோட்டுகளை கண்டு பொதுமக்கள் வியப்பு

Oct 24 2016 9:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்றுவரும் 2016-ம் ஆண்டுக்கான உலக ரோபோட்டுகள் மாநாட்டில், மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு உரையாடும் ரோபோட் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2016-ம் ஆண்டுக்கான உலக ரோபோட்டுகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ள, மனிதர்களை போன்ற ரோபோட்டுகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. மேலும், பெய்ஜிங் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ள "ஜியாஜியா" என்ற பெண் ரோபோட், மக்களின் கேள்விகளை உள்வாங்கி பதிலளிக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மனிதர்களின் உணர்வுகளையும், விருப்பு வெறுப்புகளையும் ஆழ்ந்து உணர்ந்து, உடல் அசைவுகள், முக பாவனைகள், ஆகியவற்றை உள்வாங்கி அந்த ரோபோட் பதிலளிக்கிறது. இந்த மாநாட்டில் இடம்பெற்றுள்ள மற்றொரு மனித உருவம் கொண்ட ரோபோட், காகிதங்களில் எழுதி, வரைந்து தனது தனித்திறமையை வெளிப்படுத்தியது. சுமார் 150 விதமான ரோபோட்டுகள் இந்த மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00