அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது சுற்றுலாப்பேருந்து மோதி விபத்து : 13 பேர் பலி - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Oct 24 2016 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் Desert Hot Springs பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சுற்றுலாப்பேருந்து ஒன்று டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் விடுமுறையை கழிப்பதற்காக 44 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று Salton Sea பகுதியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, Desert Hot Springs பகுதியில் உள்ள 10 வழி தேசிய நெடுஞ்சாலையில், டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து அறிந்ததும் மருத்துவ வாகனங்களுடன், காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

சுற்றுலா பேருந்தில் 44 பேர் பயணம் செய்ததாகவும், இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, டிராக்டரை முந்திச்செல்ல முயன்றதால் விபத்து நேரிட்டதாகவும், அதிகாலை நேரம் என்பதால் சீட் பெல்ட் அணியாமல் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், உயிரிழப்பு அதிகமானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00