பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமெரிக்க அரசு உயரதிகாரி ஒருவர் எச்சரிக்கை

Oct 23 2016 6:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமெரிக்க அரசு உயரதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் எல்லைதாண்டி வந்து இந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்துவது போன்ற சதிச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் புகுந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் தனது நாட்டிற்குள் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களை ஒடுக்காவிட்டால் அமெரிக்கா தானே முன்வந்து தீவிரவாத அமைப்புகளை அழிக்க நேரிடும் என அந்நாட்டு துணை அமைச்சரான ஆடம் ஜுபின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற உயரதிகாரிகள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தீவிரவாதிகளை ஒடுக்க முன்வந்தால், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும், இல்லாவிடில் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் அமெரிக்கா தானே முன்வந்து நடவடிக்கையில் இறங்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00