அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் Donald Trump மீது திரைப்பட நடிகை ஒருவர் பாலியல் புகார் : பொய்யான பாலியல் புகார்களை தெரிவிக்கும் பெண்கள் மீது தேர்தலுக்குப் பின்பு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என டிரம்ப் எச்சரிக்கை

Oct 23 2016 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் Donald Trump மீது திரைப்பட நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பொய்யான பாலியல் புகார்களை தெரிவிக்கும் பெண்கள் மீது தேர்தலுக்குப் பின்பு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் Donald Trump மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. 1980-ம் ஆண்டுகளில் இருந்து 2007-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தங்களிடம் தவறாக நடக்க முயன்றதாக டிரம்ப் மீது 10 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று கலிஃபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திரைப்பட நடிகையும், இயக்குநருமான Jessica Drake குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், தரம் தாழ்ந்த குணாதிசயம் கொண்ட டிரம்ப் அதிபராவதைஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

இதனிடையே, பென்சில்வேனியா மாகாணம் Gettysburg நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய Donald Trump, அதிபராக தான் பதவியேற்றால், முதல் 100 நாட்களில் செயல்படுத்தப்படும் கொள்கை திட்டங்களை விவரித்தார்.

அதிபர் தேர்தல் முடிந்ததும், தன்மீது பொய்யான பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் Trump தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவினை ஏற்க மறுக்கும் Trump அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00