பெய்ஜிங்கில் நடைபெற்று வரு சர்வதேச ரோபோட் மாநாடு : அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 500 குழுக்கள் பங்கேற்பு

Oct 22 2016 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெய்ஜிங்கில் இந்த ஆண்டுக்கான சர்வதேச ரோபோட் மாநாடு நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 500 குழுக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரில், நடப்பு ஆண்டுக்கான சர்வதேச ரோபோட் மாநாடு நேற்று தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. ரோபோட் சந்தையில் சீனாவுக்கு உள்ள ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 500 குழுக்கள் பங்கேற்றுள்ளன. பார்வையாளர்களைக் கவரும் வகையில், பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோட்டுகளின் செயல்திறன் பிரம்மிக்க வைக்கிறது. மனிதர்களுக்கு இணையாக Badminton ஆடும் ரோபோட், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. வண்ணத்துப்பூச்சி, பறவை வடிவில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டுகள் அங்கும் இங்குமாக பறந்து சென்ற காட்சி மனதுக்கு இதமளித்தது. இந்த ரோபோட் மாநாட்டில், ரோபோட்டுகள் பங்கேற்கும் கால்பந்து, நீர்விளையாட்டு போன்ற 6 வகையான போட்டிகளும் இடம்பெறுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00