அமெரிக்கா உடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக ஃபிலிப்பைன்ஸ் அறிவிப்பு - சீனாவுடனான உறவை பலப்படுத்தப்போவதாக தகவல்

Oct 22 2016 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்கா உடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக ஃபிலிப்பைன்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. சீனாவுடனான உறவை பலப்படுத்தப்போவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடல் விவகாரம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மறைமுகப் போர் உச்சநிலையை அடைந்துள்ளது. சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான், இலங்கை, வடகொரியா உள்ளிட்ட நாடுகளும், அமெரிக்காவுக்கு ஆதரவாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்கா உடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக ஃபிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte அதிரடியாக அறிவித்துள்ளார். Davao நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் Rodrigo, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில், தனது நாடு பெரும் அதிருப்தி கொண்டிருப்பதாகவும், அந்தக் கொள்கையிலிருந்து விலகுவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஃபிலிப்பைன்ஸ் அதிபர் Rodrigo Duterte, சீனாவுடனான உறவு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் இனிமேல் அமெரிக்க படை கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளாது என்றும் Rodrigo, சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அமெரிக்கா உடனான சீனாவின் எதிர்ப்பு நிலையே, ஃபிலிப்பைன்ஸின் நிலைப்பாட்டிற்கு காரணம் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00