அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்களின் அஞ்சலிக்குப் பிறகு, காலஞ்சென்ற இஸ்ரேல் முன்னாள் அதிபர் Shimon Peres-ன் உடல் நல்லடக்கம்

Oct 1 2016 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேல் நாட்டின் 2 முறை பிரதமராகவும், 2 முறை இடைக்கால பிரதமராகவும் பதவி வகித்தவர் Shimon Peres. பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் நீண்டகாலமாக சண்டை நடைபெற்று வந்த சூழ்நிலையில், இருநாடுகளுக்கு இடையே சமாதான நடவடிக்கை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு பெற்றவரான Shimon Peres, உடல்நலம் பாதிக்கப்பட்டு, Tel Aviv நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

93 வயதான Shimon Peres-ன் இறுதிச்சடங்கு தலைநகர் ஜெருசலேமில் நேற்று நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டேவிட் கேமரூன், Tony Blair, பிரிட்டன் இளவரசர் Charles, ஃபிரான்ஸ் அதிபர் Francein Hollande, பாலஸ்தீன தலைவர் மஹமூத் அபாஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், Peres-ன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நெல்சன் மண்டேலாவைப் போல, 20-ம் நூற்றாண்டின் மாமனிதர்களை, Shimon Peres நினைவூட்டுவதாக தெரிவித்த அதிபர் ஒபாமா, அண்டை நாடுகளோடு அமைதியான சகவாழ்வு காணும் இஸ்ரேல் என்ற நோக்கத்திற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் செலவிட்ட Shimon Peres-ன் கனவு, இன்னும் நனவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தலைவர்களின் அஞ்சலிக்குப் பிறகு Shimon Peres-ன் உடல் ஜெருசலேமில் உள்ள Herze ராணுவ கல்லறையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, Shimon Peres-ன் இறுதிச்சடங்கில் மஹமூத் அபாஸ் கலந்துகொண்டதற்கு ஹமாஸ் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் துன்புறும் பாலஸ்தீனர்களை மஹமூத் அபாஸ் அவமரியாதை செய்துள்ளதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00