இந்தோனேசியாவின் சுற்றுலாத் தலமான Barujari எரிமலை வெடித்தால் சுற்றுலாப் பயணிகள் அவசரமாக மீட்பு

Sep 29 2016 7:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவின், சுற்றுலாத் தலமான Barujari எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அவசரமாக மீட்கப்பட்டனர்.

இந்தோனேஷியாவில் Lombok தீவில் அமைந்துள்ள Barujari எரிமலை நேற்று முன்தினம் முதல் திடீரென புகையை கக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அருகில் வசித்து வந்த சுமார் ஆயிரத்து 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, Lombok மற்றும் Bali விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது எரிமலையிலிருந்து வெளியேற்றப்பட்ட புகை சுமார் 2 கிலோமீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. இதனால், மலையைச் சுற்றி 4 கிலோமீட்டர் தூரத்திற்கு எரிமலை சாம்பல் அடர்த்தியாக படர்ந்துள்ளது. சுமார் 400 பயணிகள் மற்றும் மலையேறும் வீரர்கள், மலை ஏறுவதற்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை பதிவு செய்திருந்தனர். அவர்களை மீட்பதற்காக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சுமார் 389 பேர் மீட்டகப்பட்டனர். எஞ்சிய ஒரு சிலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தோனேஷியாவில் சுமார் 130 எரிமலைகள் வெடிக்கும் தன்மையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00