அமெரிக்காவிடம் இருந்து பெறும் நிதியுதவியின் ஒரு பகுதியை, ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு வழங்கும் பாகிஸ்தான் : அமெரிக்க எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு - சர்வதேச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட அந்த நிதி பயன்படுத்தப்படுவதாகவும் திடுக்கிடும் தகவல்

Sep 24 2016 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவிடம் இருந்து பெறும் நிதியுதவியின் ஒரு பகுதியை, பாகிஸ்தான், ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு வழங்குவதாகவும், சர்வதேச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட அந்த நிதி பயன்படுத்தப்படுவதாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் துணைக்குழு பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

பயங்கரவாதம் பற்றிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் துணைக்குழு தலைவர் Ted Poe, செய்தி இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்றும், சர்வதேச பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக அந்நாடு செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுபோல, பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அமெரிக்கா வழங்கும் நிதியுதவியின் ஒரு பகுதியை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு வழங்குவதாகவும், சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயல்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அண்மையில், தனது சக உறுப்பினருடன் சேர்ந்து, பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கக் கோரும் மசோதாவை Ted Poe கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பலுசிஸ்தான் மக்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளை நிறுத்தாவிட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டுவரப்படும் என ஐரோப்பிய நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது, மனித உரிமைகளை பாகிஸ்தான் மதித்து நடக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால், அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத் துணைத் தலைவர் Ryszard Chamecki எச்சரித்துள்ளார். பலுசிஸ்தான் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை பாகிஸ்தான் புரிவதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் பலுசிஸ்தான் பிரதிநிதி புகார் தெரிவித்தார். பலுசிஸ்தான் மற்றும் சிந்து பகுதிகளில் மனித உரிமைகளை மீறி செயல்படும் பாகிஸ்தானை சர்வதேச சமுதாயம் தண்டிக்க வேண்டும் என்றும் Ryszard Chamecki வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00