உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரிக்க முடிவு - தற்காப்புக்காகவே அணு ஆயுத பலத்தை பெருக்கிக் கொள்வதாக அறிவிப்பு

Sep 24 2016 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனத்தையும் மீறி, அணு ஆயுத பலத்தை பெருக்கிக் கொள்வது தற்காப்புக்காகத்தான் என குறிப்பிட்டுள்ள வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரிக்கப்போவதாக உறுதியாகத் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியக் கண்டத்தில் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா, கடந்த 2006-ம் ஆண்டு முதல், உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், பொருளாதாரத் தடைகளைப் பற்றி கவலைப்படாமலும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் 5-வது முறையாக Kijju மாகாணத்தில் உள்ள Punggyeri பகுதியில், வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டு பரிசோதனை நடத்தியது.

இதையடுத்து அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனத்தையும் மீறி, அணு ஆயுத பலத்தை பெருக்கிக் கொள்வது தற்காப்புக்காகத்தான் என வடகொரியா குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் Ri Yong, அணு ஆயுதங்களைப் பெருக்குவது தனது நாட்டின் கொள்கையாக கைபிடிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் அணு ஆயுதங்களால் மட்டுமே கொரிய தீபகற்பத்தில், வடகொரியா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடியும் என்றும், அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்த முடியாது எனவும் Ri Yong திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபையில் அணு ஆயுத தயாரிப்பு குறித்து வடகொரியா தெரிவித்துள்ள திட்டவட்ட கருத்துக்கு, தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையின் உறுப்புநாடுகளின் பட்டியலில் வடகொரியா இருக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்யும் நேரம் நெருங்கிவிட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00