அரசு முறை பயணமாக கியூபா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அந்நாட்டு முன்னாள் அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோவை சந்திப்பு

Sep 23 2016 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அரசு முறை பயணமாக கியூபா சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ அவரை வரவேற்றார். தலைநகர் ஹவானாவில் அபேவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா உள்ளிட்டவை குறித்து, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனை நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஜப்பான், கியூபா இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேற்கத்திய தலைவர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டாத, 90 வயதாகும் ஃபிடல் கேஸ்ட்ரோ, ஜப்பானின் ஷின்சோ அபேயை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜப்பான் தலைவர் ஒருவர், அரசுமுறை பயணமாக, கியூபா செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00