அமெரிக்காவில், கருப்பின நபர் மீது மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, North Carolina-வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

Sep 23 2016 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் Oklahoma மாகாணம் Tulsa பகுதியில், Terence Crutcher என்ற கருப்பின நபர், பெண் போலீஸ் அதிகாரியால் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம், அமெரிக்கவாழ் கருப்பின மக்களிடையே பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தி, ஆங்காங்கே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பதற்றம் தணிவதற்குள், North Carolina-வின் Charlotte நகரில், Keith Scott என்ற மற்றொரு கருப்பின நபர், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நள்ளிரவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, காவல்துறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கண்டன கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என Keith Scott குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00