இத்தாலியில், ஸ்பெயின் நினைவுச் சின்ன கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது

Sep 23 2016 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில், ஸ்பெயின் நினைவுச் சின்ன கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இத்தாலி, ஸ்பெயின் நாட்டு கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ரோமானியக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இத்தாலியில், ஏராளமான நினைவுச் சின்னங்கள் அதன் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இத்தாலி தலைநகரம் ரோமில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டு நினைவுச் சின்னம் ஒன்றின், 135 படிக்கட்டுகளை அதன் பழமை மாறாமல் அதிக பொருட்செலவில் புனரமைத்துள்ளனர். அதிகமாக சிதிலமடைந்த இந்த நினைவுச்சின்ன கட்டடத்திற்குள் செல்ல 18ம் நூற்றாண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் புனரமைப்புப் பணிகள் நீண்ட காலமாக தனியார் மற்றும் அரசு நிதியுதவியின் பேரில் நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நினைவுச் சின்னம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறக்கப்பட உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஸ்பானிஷ் இசைக்குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட ஸ்பெயின் நடனக் கலைஞர்கள் மற்றும் ரோம் கலைஞர்கள் 10 பேர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00