பாலி தீவு அருகே 30 டன் அமோனியம் நைட்ரேட் உரத்துடன் சென்ற கப்பலை இந்தோனேசிய அதிகாரிகள் திடீரென கைப்பற்றினர்

Sep 23 2016 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசிய அதிகாரிகள், Bali தீவு அருகே, 30 டன் அமோனியம் நைட்ரேட் உரத்துடன் சென்ற கப்பலை திடீரென கைப்பற்றினர். வெடிபொருட்கள் தயாரிக்கும் நோக்கத்துடன் இந்த உரங்கள் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து 30 டன் உரங்களுடன் சென்ற கப்பலை, Bali தீவு அருகே, இந்தோனேசியாவின் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு போலீசார் கைப்பற்றினர். கப்பலின் ஊழியர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கப்பலில் இருந்த உரங்கள் அமோனியம் நைட்ரேட் என்பதும், இந்தோனேசியாவின் Sulawesi தீவுக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்தது. இந்த தீவில், தீவிரவாத சம்பவங்கள் காரணமாக ஏற்கனவே வன்முறை நிகழ்ந்திருப்பதால், வெடிகுண்டு தயாரிக்கும் நோக்கத்துடன் இந்த உரங்கள் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00