சிரியாவில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவ்விரு நாடுகளின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தம் முறிவடைந்துள்ளது

Sep 22 2016 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில், அதிபர் Bashar al-Assad தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கில், அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போரட்டம், உள்நாட்டு போராக உருவெடுத்தது. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனையின் பேரில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றன. இதனால் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் கையெழுத்திட்டன. இதன் காரணமாக, கடந்த 12ம் தேதி மாலை முதல் சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம், ஈராக் நாட்டு எல்லை வழியாக சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்காவின் F-16 மற்றும் A-10 ரக போர் விமானங்கள், Deir al -Zor நகரில் உள்ள சிரியா ராணுவப் படை மீது குண்டுமழை பொழிந்தன. இந்தத் தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 80 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, போர் நிறுத்தம் முறிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, சண்டையில் ஈடுபட்டு வந்த குழுக்கள், நேற்று முதல் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அலெப்போ நகரில், கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரியா ராணுவ விமானங்கள் குண்டுமழை பொழிந்ததாக சிறியா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அலெப்போ நகரில், தங்களது அமைப்பைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் உயிரிழந்ததாக சிரியா மருந்து நிவாரண அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிரியாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00