ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களை கூலி வேலைக்கு அனுப்ப அந்த நாட்டு அதிபர் Kim Jong-un முடிவு செய்துள்ளதாக தகவல்

Aug 26 2016 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசிலில் அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வட கொரியா வென்றுள்ளது. அதேநேரம், பரம எதிரி நாடான தென் கொரியா 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை பெற்றுள்ளது. குறைந்தது 5 தங்க பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என வடகொரிய அதிபர் Kim Jong-un ஏற்கனெவே உத்தரவிட்டிருந்தார். ஆனால், தென்கொரியாவை விட தங்கப்பதக்கம் குறைவாக பெற்றதால் கோபமடைந்த அதிபர் Kim Jong-un, வட கொரிய வீரர்கள் நாடு திரும்பியதும், பதக்கம் வெல்லாதவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக, அவர்களை சுரங்க தொழிலுக்கு கூலி வேலை செய்ய அனுப்பிவிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்நாட்டு ரேஷன் கடைகளில்தான் உணவு பொருட்கள் சப்ளை உண்டு என்பதால், வீரர்களின் ரேஷன் கார்டுகளை பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வட கொரிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஹோங் உன்-ஜோங், தென்கொரிய வீராங்கனையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவமும் அதிபருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியர்களுடன் எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற விதியை மீறி, வீராங்கனை செல்ஃபி எடுத்துள்ளதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கும் செல்லக்கூடும் என்பதால், வடகொரிய வீராங்கனை அச்சத்தில் உறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00