செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டு வரும் சிறப்பு விண்கலத்தின் 9-வது சோதனை வெற்றி - தண்ணீர் தளத்தில் விண்கலத்தை இறக்கி நாசா விஞ்ஞானிகள் சாதனை

Aug 26 2016 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்டு வரும் விண்கல சோதனையை நாசா விஞ்ஞானிகள் 9-வது முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். விண்கலத்தை தண்ணீரில் இறக்கி சோதனை செய்யப்பட்டது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வரும் 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்காக ஓரியன் என்ற விண்கலத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஓரியன் என்ற விண்கலத்தை வடிவமைத்து சோதனை செய்து வருகிறது. மனிதர்கள் அடங்கிய விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்திற்குள் எவ்வித சேதமுமின்றி எடுத்துச் செல்லுதல், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பத்திரமாக தரையிறக்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளை கட்டமைக்க பல்வேறு கட்ட சோதனைகளை நாசா விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர். இதன் 9-வது சோதனை தற்போது வெற்றிகரமாக வெர்ஜீனியாவில் நடத்தப்பட்டது. விண்கலம் தண்ணீரில் வேகமாக இறக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. மிகவும் சாவாலாக இருந்து வந்த இந்த சோதனை முயற்சி தற்பொழுது வெற்றிபெற்றதற்கு, நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கான விண்கல சோதனை இன்னும் ஒரு சோதனை மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே, விண்கலம் தயாரிக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவே கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00