மியான்மர் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : புராதன சிறப்புவாய்ந்த நூற்றுக்கணக்கான கட்டடங்கள் பலத்த சேதம்

Aug 26 2016 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

அண்டை நாடான மியான்மரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இளஞ்சிறார்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் புராதன சிறப்புவாய்ந்த புத்த மத கட்டடங்கள் சேதத்திற்கு உள்ளாயின.

மியான்மர் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் இது 6.3 ஆக பதிவானது. பழங்கால நகரமான Bagan, இந்த நிலநடுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனான்சங் என்ற நகரில் 2 இளஞ்சிறார்கள் உயிரிழந்தனர். ஆற்றின் கரையோரம் இருந்த புத்தமத கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. Bagan நகரைச் சுற்றிலும் வரலாற்றுச் சின்னங்களாக விளங்கிய நூற்றுக்கணக்கான புத்தமத கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களை வேதனைய வைத்துள்ளது. இந்த கட்டடங்கள் பெரும்பாலும் 11 மற்றும் 13-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இந்த நில நடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாங்காக் நகரில் உள்ள வானுயர்ந்த கட்டடங்கள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00