அஃப்கனிஸ்தானில் அமெரிக்கன் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித் தாக்குதல் : 7 பேர் பலி - 30க்கும் மேற்பட்டோர் காயம்

Aug 25 2016 6:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கனிஸ்தானில் அமெரிக்கன் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கன் பல்கலைக் கழகத்தில், ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பல்கலைக் கழகத்திற்குள் நேற்று மாலை நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். பல்கலைக் கழக வளாகமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் அலறி அடித்தபடி வகுப்பறைகளில் தஞ்சமடைந்தனர். உடனடியாக பல்கலைக் கழக வளாகத்தை சுற்றிவளைத்த அஃப்கனிஸ்தான் பாதுகாப்புப் படையினர், அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00