மலேசிய உயிரியல் பூங்காவில் பாண்டா கரடிகளுக்கு நடத்தப்பட்ட பிறந்த நாள் விழா - உற்சாகமாக கண்டு களித்த பார்வையாளர்கள்

Aug 24 2016 7:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேசியாவைச் சேர்ந்த ஜோடி பாண்டா கரடிகள் தங்களது 10வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடின. இதனை முன்னிட்டு மலேசியாவின் Negara உயிரியல் பூங்காவில் ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர்.

உலகில் சீனாவில் மட்டுமே பாண்டா கரடிகள் காணப்படுகின்றன. இவ்வகை பாண்டா கரடிகள் அவற்றிற்கான உரிய சீதோஷ்ண நிலையில் மட்டுமே உயிர் வாழக்கூடிய தன்மை படைத்தது. இதற்காக பல்வேறு நாடுகள் தங்களது உயிரியல் பூங்காக்களில் பாண்டா கரடிகள் வளர்வதற்குரிய பருவநிலையை செயற்கையாக உருவாக்கி சீனாவிடம் குத்தகை முறையில் வாங்கி வளர்த்து வருகின்றனர். அவ்வகையில், மலேசியாவின் Negara தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள பாண்டா கரடிகள் தங்களது 10வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடின. Xing Xing மற்றும் Liang Liang என பெயரிடப்பட்டுள்ள இந்த ஜோடி பாண்டா கரடிகள், கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி சீனாவில் பிறந்தன. நேற்றுடன் அவை 10 வருடங்களை கடந்து விட்டன. இந்த ஆண் மற்றும் பெண் கரடிகளின் குட்டியான Nuan Nuan கடந்த 18ம் தேதி தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியது. இந்த குட்டி பாண்டா பிறந்ததிலிருந்து இதுவரை 20 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துச் சென்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாண்டா கரடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவற்றுக்கு ஐஸ் கேக் வழங்கப்பட்டன. அவற்றை விருப்பத்துடன் உண்ட கரடிகளைக் காணவும், அவற்றிற்கு வாழ்த்து சொல்லவும் ஏராளமான பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். கடந்த 2014ம் ஆண்டு சீனா, மலேசியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாகக் கொண்டாடப்பட்ட 40வது ஆண்டு விழாவில் இந்த பாண்டா கரடிகள் மலேசியாவிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00