நியூஜெர்சியில் அமைந்துள்ள நீர்நிலையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த காட்சி அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

Aug 24 2016 7:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூஜெர்சியில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றில் பல்லாயிரக்கணக்கான "peanut bunker" வகை மீன்கள் செத்து மிதந்த காட்சி அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், Keansburg நகரில் அமைந்துள்ள Waackaack நீர்நிலையில், 'Peanut Bunker' என்று அழைக்கப்படும் சிறியவகை உப்பு நீர் மீன்கள் வளர்ச்சியடையாத நிலையில், பல்லாயிரக்கணக்கில் செத்து மிதந்தது உயிரியல் ஆர்வலர்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளன. இவ்வகை மீன்கள் பெரிய மீன்களால் வேட்டையாடப்படும் பொழுது நீரோட்டத்தினால் ஒட்டுமொத்தமாக ஆக்ஸிஜன் குறைவான இடத்திற்கு இடம்பெயர்ந்து இவ்வாறு மொத்தமாக உயிரிழந்து விடுவதாக உயிரியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அட்லாண்டிக் கடல் பகுதியில் வாழும் இவ்வகை மீன்கள் இந்த நீரோடைக்கு எப்படி இடம்பெயர்ந்து வந்தன என்பது குறித்து துல்லியமாக கூறமுடியாது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் இந்த மீன்கள் செத்து கரை ஒதுங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள உயிரியல் ஆர்வலர்கள் இதுபோன்று வருடத்திற்கு 2 முறை நிகழ்வதாகவும் குறிப்பாக கோடை காலத்தில் நிகழ்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவதே மீன்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00