ஆர்ஜென்டினாவில் தொடங்கியுள்ள Tango நடன சாம்பியன்ஷிப் போட்டி - உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 400 ஜோடிகள் பங்கேற்பு

Aug 23 2016 6:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்ஜென்டினாவில் தொடங்கியுள்ள Tango நடன சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆர்ஜென்ட்டினா தலைநகர் Buenos Aires-ல் உலக Tango நடன சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. நேற்று தொடங்கிய இப்போட்டிகள், வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400 ஜோடிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். Tango நடனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் Buenos Aires-ல் மக்களின் உணர்வுகளை காட்சிப்படுத்தும் விதமாகவும், பழமையான நினைவுகளை வெளிப்படுத்தும் வகையிலும் நேர்த்தியாகவும், உணர்ச்சி மிக்க வகையிலும் பங்கேற்பாளர்கள் நடனமாடி வருகின்றனர். இதில், போட்டியாளர்கள் ஒருங்கிணைந்து சுழன்று ஆடும் திறனையும், கண்களின் நேர்த்தியான அசைவுகளையும் கொண்டு நடுவர்கள் மதிப்பெண் வழங்கி வருகின்றனர். இந்த நடனத் திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான Tango நடன ரசிகர்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர். இறுதிப் போட்டி Usina del Arte கலாச்சார மையத்தில் 31ம் தேதி நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00