சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில், ரஷியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது

Jul 29 2016 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில், ரஷியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில், உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் இக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த கடல் பகுதிக்கு ஃபிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனிடையே, ஃபிலிப்பைன்ஸ் தொடர்ந்த வழக்கில், தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுப்பூர்வ ஆதாரம் ஏதுமில்லை என சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க சீனா மறுத்துவிட்டது.

இந்நிலையில், ரஷியாவுடன் தென்சீனக் கடற்பகுதியில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் Yang Yujun, இந்த பயிற்சிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், இரு தரப்பு ராணுவ உறவுகளை வளர்த்துக்கொள்ளும் விதத்திலும், கடல் சார் அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிக்கும் விதத்திலும் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறும் எனவும் Yang Yujun குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00