66 மீட்டர் பிரமாண்ட sandwich - மெக்ஸிக்கோ சமையல் கலைஞர்கள் புதிய சாதனை
Sep 2 2016 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்ஸிக்கோவில், ஏராளமான சமையல் கலைஞர்கள் பங்கேற்று, 66 மீட்டர் நீளத்தில் மிக பிரமாண்டமாக sandwich-ஐ தயாரித்தனர். இதன் மூலம் ஏற்கெனவே அந்நாட்டில் நிகழ்த்தப்பட்ட முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது.
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோ தலைநகர் Mexico Cityயில், இந்த வினோத சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஏராளமான சமையல் கலைஞர்கள் ஒன்று திரண்டு பிரமாண்ட sandwich தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர். "torta" என்ற sandwich-ஐ அவர்கள் தயாரித்தனர். கீரை, வெங்காயம், தக்காளி துண்டுகள் போன்றவற்றை கொண்ட இந்த பிரம்மாண்ட sandwich தயாரிக்கப்பட்டது. மேலும், ஆயிரக்கணக்கான லிட்டர் mayonnaise சாறு, கடுகு மற்றும் காரமான சுவையூட்டிகள் ஆகிய பொருட்களையும் கலந்து இந்த sandwich தயாரிக்கப்பட்டுள்ளது. 66 மீட்டர் நீளத்தில் இது தயார் செய்யப்பட்டதால், புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இதன் மூலம் மெக்சிகோ நாட்டில் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 5,440 கிலோ எடைகொண்ட sandwich-ம், கடந்த 2011-ம் ஆண்டு லெபனான் உணவகங்கள் தயாரித்த 2,411 அடி நீளம் கொண்ட sandwich-ம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.