பிரான்சில் தேவாலயத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Jul 27 2016 7:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்சில், தேவாலயத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பிரான்சில் கடந்த 14ம் தேதி தேசிய தின கொண்டாட்டத்தின்போது நடந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள், பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள Rouen நகர தேவாலயத்திற்குள் திடீரென துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் புகுந்த 2 தீவிரவாதிகள், அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியை சுற்றிவளைத்து பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிரியார் ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாதிகள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தேவாலயத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00