சீனாவில் கடும் சூறவாளி மற்றும் ஆலங்கட்டி மழை - 90-க்கும் மேற்பட்டோர் பலி

Jun 24 2016 7:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் கிழக்குப் பகுதியில் பெய்த ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை மற்றும் கடும் சூறாவளி தாக்கியதில், 98 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சீனாவில் வழக்கமாக மே மாத இறுதியில் தொடங்கும் பருவமழை, 2 மாதங்களுக்கு நீடிக்கும். தற்போது, சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜியாங்ஜி, ஹுபே, சிச்சுவான் உள்ளிட்ட 10 மாகாணங்களில், பருவமழை காரணமாக கடந்த 18-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, கிழக்கு சீனாவின், Jiangsu மாகாணத்தில் உள்ள Yancheng நகரில் நேற்று ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்ததுடன், கடும் சூறாவாளி தாக்கியது. இதன்காரணமாக, Jiangsu மாகாணத்தில் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பல்வேறு இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடும் சூறாவளி மற்றும் கனமழைக்கு 98 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். முன்னதாக, இந்த வாரம் சீனாவின் தெற்குப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 22 பேர் உயிரிழந்தனர். 20 பேர் மாயமானது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00