அமெரிக்காவில் நெருப்புக் குழம்பை வெளியேற்றி வரும் Kilauea எரிமலை - வீடியோ காட்சிகள் வெளியீடு
May 27 2016 8:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் உள்ள Kilauea எரிமலை குமுறி 2 முறை நெருப்பு குழம்பை வெளியேற்றிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள 5 எரிமலைகளில் ஒன்றான Kilauea எரிமலை அவ்வப்போது குமுறி நெருப்புக் குழம்பை வெளியேற்றி வருகிறது. இந்த எரிமலை கடந்த 24-ம் தேதி தொடங்கி 2 முறை குமுறியது. இதன் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. முதலில் கடந்த 24-ம் தேதி, எரிமலை குமுறியதால் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறிய நெருப்புக் குழம்பு, வடமேற்கு பகுதி வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பரவியது. இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் காலை எரிமலை குமுறியது. இம்முறை கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறிய நெருப்பு குழம்பு, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை பரவியதாக அந்நாட்டு எரிமலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.