போர்விமானங்களை அமெரிக்கா வழங்காவிட்டாலும் வேறு நாடுகளிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் - பாகிஸ்தான் திடீர் மிரட்டல்

May 4 2016 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

F-16 ரக போர் விமானங்களை வழங்காவிட்டால், வேறு நாடுகளிடமிருந்து போர் விமானங்களைப் பெறுவோம் என அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் தலைதூக்கியுள்ள தீவிரவாதத்தை அடக்குவதற்காக, வெளியுறவு சார்ந்த அமெரிக்க ராணுவ நிதியத்தின் உதவியுடன் எட்டு F-16 ரக போர் விமானங்கள் தேவையென பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டதை ஏற்று, அதிபர் ஒபாமா அனுமதி வழங்கினார். ஆனால், அந்தப் போர் விமானங்களை பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தக்கூடும் என எச்சரித்ததோடு, ராணுவ நிதியத்திலிருந்து நிதிஒதுக்கி விமானங்கள் வழங்குவதற்கும் அமெரிக்க நாடாளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, ராணுவ நிதியத்திலிருந்து நிதிஒதுக்கி, பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை வழங்கப் போவதில்லை என்றும், வேண்டுமானால் முழுத் தொகையையும் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறும் அமெரிக்கா தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் Chaudhry Nisar Ali khan, அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்றபடி நடக்க, பாகிஸ்தான் ஒன்றும் அந்த நாட்டின் காலனி நாடல்ல என்றும், பாகிஸ்தானுக்குத் தேவையான போர் விமானங்களை வேறு நாடுகளிடமிருந்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மிரட்டல் விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00