இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதி, பாகிஸ்தானுக்கு F-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா புதிய நிபந்தனை : போர் விமானங்களுக்கான முழுத்தொகையை ஒரே நேரத்தில் செலுத்தினால் மட்டுமே வழங்கப்படும் என திட்டவட்டம்

May 3 2016 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் முற்றிலுமாக ஒடுக்கும்வரை அந்நாட்டுக்கு மானிய உதவி வழங்கப்பட மாட்டாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், முழு பணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்தினால் மட்டுமே F-16 ரக போர் விமானங்கள் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. இதன் காரணமாக தீவிரவாதிகளை ஒடுக்கி, பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் முற்றிலுமாக தடுத்து நிறுத்தும்வரை அந்நாட்டுக்கு மானிய உதவிகள் எதுவும் வழங்கப்படாது என அமெரிக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு F-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய ஒபாமா அரசு முடிவுக்கு, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். F-16 ரக போர் விமானங்களை கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க எம்.பி.க்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, இந்த போர் விமான விற்பனை குறித்து கடுமையான நிலையை ஒபாமா அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்படும் F-16 ரக போர் விமானங்களுக்கு உரிய முழுத் தொகையையும் ஒரேநேரத்தில் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00