உலக நாடுகளின் அச்சுறுத்தலையும் மீறி, வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர அளவிலான ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி

Apr 29 2016 7:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக நாடுகளின் அச்சுறுத்தலையும் மீறி, வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர அளவிலான ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிவடைந்தது.

ஐ.நா. சபையின் பொருளாதார தடைகளையும், உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்திவருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஹைட்ரஜன் குண்டை சோதித்து, அந்நாடு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கைக்காக ஐ.நா. சபையும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தன. ஆனாலும், அதனை பொருட்படுத்தாத வடகொரியா, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்நாட்டின் தேசத் தந்தையும், முன்னாள் அதிபருமான Kim il sung-ன் பிறந்தநாளான கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா முயன்றது. ஆனால், அது தோல்வியை தழுவியது.

இந்நிலையில், நடுத்தர அளவிலான கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா நேற்று மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தது. அந்நாட்டில் உள்ள கிழக்கு கடற்கரையான வான்சன் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 6.40 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஆனால், ஏவுகணை ஏவப்பட்ட ஒரு சில நொடிகளில், திட்டமிட்டபடி செல்லாமல் தோல்வியை தழுவியதாக, தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00