அமெரிக்காவில் கொட்டும் பனிமழையின் காரணமாக, சாலைகள் முழுவதும் பனி படர்ந்து காணப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு

Feb 13 2016 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கொட்டும் பனிமழையின் காரணமாக, சாலைகள் முழுவதும் பனி படர்ந்து காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவக்காற்றோடு பனியும் சேர்ந்துகொண்டதால், மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் அளவில் அமெரிக்காவை உறைந்து போகச் செய்துள்ளது.

அமெரிக்காவின் கரோலினா, Philadelphia, iowa, Texas உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து பனிமழை பொழிவதாலும், மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசுவதாலும், தற்போதைய மழைக்காலம், பனிமழைக் காலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, சாலைகளும், ரயில் பாதைகளும் பனித்திட்டுகளாக மாறியிருப்பதால், இப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் விளைந்திருக்கும் பயிர்களை பனிமூடிவிட்டதால் அறுவடை பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப் பனிமழைக் காலம், இந்த ஆண்டின் குளிர் மிகுந்த காலமாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00