ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான C.I.A. பரபரப்பு தகவல் : ரசாயன ஆயுதங்களை மேலைநாடுகளுக்கு விற்பனை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கை

Feb 12 2016 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாகவும், தாக்குதலின்போது சிறிய அளவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும், அமெரிக்காவின் உளவு அமைப்பான C.I.A. பரபரப்பான தகவல் வெளியிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி, ஆட்சி நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்களுடைய ஆளுகையை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, அண்டை நாடுகளுடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். சண்டையின்போது, ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதாக C.I.A. உளவு அமைப்பின் இயக்குநர் John Brennan தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் இதனை குறிப்பிட்ட அவர், சிறிய அளவில் Chlorine மற்றும் கடுகு நச்சுவாயு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் ஆற்றலை ஐ.எஸ். தீவிரவாதிகள் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு தயாரிக்கப்படும் ரசாயன ஆயுதங்களை மேலைநாடுகளுக்கு அவர்கள் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், எனவே ரசாயன ஆயுதங்களை ரகசியமாக கடத்திச் செல்லும் வழித்தடங்களை கண்டறிந்து, தடுக்கவேண்டியது முக்கியம் என்றும் John Brennan குறிப்பிட்டார்.

ரசாயன ஆயுதங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்திவருவது குறித்து, அமெரிக்காவின் தேசிய உளவுப்பிரிவின் இயக்குநர் James Clapper ஏற்கெனவே உளவுத்துறைக்கான Senate சபையில் தெரிவுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00